ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

தொழிற்சாலைகளுக்கான உரிமம் பெற நில அந்தஸ்து மாற்றப்படுவது அவசியம்- இங் ஸீ ஹான்

 ஷா ஆலம், நவ 18- தொழிற்சாலைகளுக்கு முறையான லைசென்ஸ் பெறுவதாக இருப்பின் சம்பந்தப்பட்ட நில அந்தஸ்து விவசாயத் துறையிலிருந்து தொழில்துறைக்கு மாற்றப்படுவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த போதிலும் நில அந்தஸ்தை மாற்றும் நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ள முடியும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

தொழிற்சாலை உரிமையாளர்கள் நில அந்தஸ்தை இன்னும் மாற்ற முடியும். ஆனால் அவர்கள் ஊராட்சி மன்றங்களிடம் அதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என்பதோடு நிலத்திற்கான பிரீமியத் தொகையையும் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

மாசுபாடு பிரச்சனைகளைக் களைவதற்கும் மாநில அரசு மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு கிடைக்க்கூடிய வருமானம் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கும் சட்ட விரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்மாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

மேலும், இந்நடவடிக்கையின் வாயிலாக வேலையில்லாப் பிரச்சனைகளை குறைத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதற்குரிய சூழலையும் ஏற்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 3.3 விழுக்காடாக இருந்த வேலையில்லாதோர் விகிதம் கடந்தாண்டில் 4.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சட்டவிரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையின் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். 


Pengarang :