ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

செரியா திட்டத்தின் கீழ் வெ.43 லட்சம் செலவில்  அடுக்குமாடி வீடுகள் சீரமைப்பு

ஷா ஆலம், நவ 21- செரியா திட்டத்தின் மூலம் 17 குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி  குடியிருப்புகளை பழுது பார்க்க சிலாங்கூர் அரசு இந்த ஆண்டு மொத்தம் 43 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளது.

உலு சிலாங்கூர்,  கலும்பாங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை சீரமைப்பதற்கான செலவினமும் இந்த ஒதுக்கீட்டில் அடங்கும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா  இஸ்மாயில் கூறினார்.

"கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, காஜாங், ஷா ஆலம், அம்பாங் ஜெயா மற்றும் உலு சிலாங்கூர் ஆகிய ஆறு பகுதிகளில் கூரைகள், தண்ணீர் தொட்டிகள் பழுது பார்ப்பது மற்றும் வர்ணம் பூசுவதற்காக  இந்த நிதி பயன்படுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க மாநில அரசு கிட்டத்தட்ட 3 கோடியே 20 லட்சம் செலவிட்டப்பட்டதாக  ரோட்சியா மேலும் தெரிவித்தார்.

 கடந்த 2018 முதல்  2020 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை செரியா திட்டத்தின் கீழ் 56 குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகள் பயன் பெற்றுள்ளன என்றார் அவர்.

Pengarang :