ECONOMYPBTSELANGOR

தாமதமாக மதிப்பீட்டு வரியை செலுத்துவோருக்கு அபராதம்  செலுத்துவதிலிருந்து விலக்களிப்பு

ஷா ஆலம், நவ 21- நோயைத் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இவ்வாண்டின் இரண்டாம் தவணைக்கான மதிப்பீட்டு வரியை தாமதமாக செலுத்துவோருக்கு அபராதம் விதிப்பதிலிருந்து  மாநில அரசு விலக்களித்துள்ளது.

இதன் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு கடந்த நவம்பர் 17 அங்கீகரிக்கப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த அபராதத் தொகை விலக்களிப்பு நடவடிக்கை 1 கோடியே 38  லட்சம் வெள்ளி நிதித் தாக்கத்தைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 தொற்று நோயினால் பாதிப்பை எதிர் நோக்கியுள்ள  மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கு மாநில அரசு எடுத்து வரும் முயற்சி மற்றும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எனவே, இரண்டாம் தவணைக்கான மதிப்பீட்டு வரியை தாமதமாக செலுத்தும் அனைத்து வளாகங்கள் / கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று  நேற்று வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வரி செலுத்தப்படுவதை உறுதி செய்ய தங்களளின் மதிப்பீட்டு வரி அறிக்கையை சரிபார்க்கும்படி பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

Pengarang :