Aksi penjaga gol Arishah Qarinah Mohammed Nijam, 16 tangkas mengawal gawang ketika menjalani sesi latihan bersama skuad hoki Selangor di Stadium Hoki Petaling Jaya pada 2 Jun 2020. Foto ASRI/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

உலகக் கிண்ண இளையோர் ஹாக்கி போட்டி- பிரான்சுக்கு மலேசியா கடும் போட்டியை வழங்கும்

கோலாலம்பூர், நவ 29- இந்தியாவின் புவனேஸ்ரில் நடைபெறும் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் பிரிவு இளையோர் அனைத்துலக ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு நுழைவதற்கான வாய்ப்பைப் பெற மலேசிய அணி பிரான்சுக்கு கடும் போட்டியை வழங்கும்.

வரும் புதன்கிழமை நடைபெறும் அந்த காலிறுதிப் போட்டியில் மலேசியா பிரான்சுடன் களம் காண்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பலம் வாய்ந்த குழுக்களில் ஒன்றாக பிரான்ஸ் கருதப்படுகிறது.

அந்த ஐரோப்பிய குழுவுக்கு மலேசியா நிச்சயம் கடும் போட்டியை வழங்கும் என்று தேசிய ஹாக்கி குழு பயிற்றுநர் வெலஸ் டான் கூறினார்.

கடந்த புதன் கிழமை நடைபெற்ற “பி“ பிரிவு ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான இந்தியாவை பிரான்ஸ் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தியாவை வீழ்த்தியதை வைத்து பார்க்கையில் பிரான்ஸ் பலம் வாய்ந்த குழுவாக கருதப்படுகிறது. அக்குழுவில் தரம் வாய்ந்த பல ஆட்டக்காரர்கள் உள்ளனர். இருப்பினும், மலேசிய குழு அவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்று டான் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற “ஏ‘‘ பிரிவின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசியா காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.


Pengarang :