ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் பட்ஜெட் 2022 அம்சங்கள்

ஷா ஆலம் நவ 29 ;- சிலாங்கூர் பட்ஜெட் 2022 அம்சங்கள்

சிலாங்கூர் பட்ஜெட் 2022  5  முக்கிய அம்சங்களை கொண்டுள்ளன. 

 முதலாவது :  உயரிய பொருளாதார வளர்ச்சியை  துரிதப்படுத்துவது  மற்றும்  வேவையளிப்பு  ஆற்றலை  மேம்படுத்துவது 

இரண்டாவது :  பரிவுமிக்க சமூகத்தை மேம்படுத்துவது  மற்றும் சமூக  சுபிட்சத்திற்கு முன்னுரிமை வழங்குவது

மூன்றவாது  :  சிலாங்கூர் பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவது

நான்காவது:  பசுமை சுற்றுப்புறத்தை உருவாக்குவது மற்றும்  நீடித்த மேம்பாடு 

ஐந்தாவது :  விவேக தொழிற்நுட்பம் மற்றும்  இலக்கவியலுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுப்பது.

முதலாவது அம்சம் :  உயரிய பொருளாதார  வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு 
#  சேவையளிப்பின்  ஆற்றலை மேம்படுத்துவது.

அறிமுகம் 

 2020 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை கோவிட்  -19 தொற்று  நீடித்து வருவதால் அது பொருளாதார மற்றும் சமூக துறையில்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  பலமுறை நடமாட்ட கட்டுப்பாட்டு  ஆணையின் காரணமாக பொருளாதார துறைகள் மூடப்பட்டதால்  பெரிய விளைவை ஏற்படுத்தியதோடு சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து  கோவிட்டிற்கு பிந்திய பொருளாதார மீட்சிக்கான  பல்வேறு ஊக்குவிப்பு  சலுகைகள்  மற்றும் பொருளாதார  வளர்ச்சியை  வலுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை  வரைந்துள்ளது. சிலாங்கூரின் ஆக்கப்பூர்வமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்  நோக்கத்தை   அந்த செயல் திட்டம் கொண்டுள்ளது.  இந்த முயற்சிகளுக்காக  இந்த  பட்ஜெட்டில்    சிலாங்கூரின் பொருளாதாரத்திற்கு   41 கோடியே 61லட்சத்து  56,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

Pengarang :