ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்- டாக்டர் சித்தி மரியா

ஷா ஆலம், டிச 4- மாற்றுத் திறனாளிகளின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அத்தரப்பினர் மத்தியில் ஆற்றலை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.

சிலாங்கூர் பிரத்தியேக பிள்ளைகள் கல்வி மையம் (அனிஸ் மையம்) கடந்த ஆகஸ்டு மாதம் திறக்கப்பட்டதானது மாற்றுத் திறனாளிப் பிள்ள்ளைகளின் திறனை சிறு வயது முதல் வளர்ப்பதில் மாநில அரசுக்கு உள்ள அக்கறையை காட்டுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பிள்ளைகளை பாலர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிக்கு செல்வதற்கு தயார் படுத்தும் வகையில் தொடக்க வழிகாட்டல் திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார அவர்.

பிரத்தியேகச் சிறார்களை பராமரிக்கும் திறனை கொண்டிருப்பதற்கு ஏதுவாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  சிறப்பு பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு 2022 புத்தக விழாவுடன் சேர்த்து ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் நிலையிலான அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.

அனிஸ் துறையின் வாயிலாக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 30 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிடின் ஷாரி பட்ஜெட் தாக்கலின் போது கூறியிருந்தார்.


Pengarang :