ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

எ.எஃப்.எஃப். கிண்ண கால்பந்து- வியட்னாமிடம் 0-3 கோல் கணக்கில் வீழந்தது மலேசியா

கோலாலம்பூர், டிச 13- சிங்கப்பூர், பீஷான் அரங்கில் நேற்று நடைபெற்ற எ.எஃப்.எஃப். எனப்படும் ஆசியான் கால்பந்து சம்மேளனக் கிண்ண கால்பந்து போட்டியின் பி பிரிவு ஆட்டத்தில் மலேசியா வியட்னாமிடம் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.

இந்த தோல்வி காரணமாக அரையிறுதி ஆட்டத்தில் நுழையும் மலேசியாவின் கனவு முன்னதாகவே கலைந்து போனது.

முதல் பாதி ஆட்டத்தின் மையப் பகுதியில் நான்கே நிமிட இடைவெளியில் இரு கோல்களைப் புகுத்தி தனது நிலையை வலுப்படுத்திக் கொண்ட வியட்னாம், ஆட்டத்தின் இறுதியில் மேலும் ஒரு கோல் அடித்து வெற்றிக் கனியைப் பறித்துச் சென்றது.

இந்த முடிவின் வழி இந்த பருவத்திற்கான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவாத குழு என்ற சாதனையை மலேசிய அணி பறிகொடுத்துள்ளது. பயிற்றுநர் டான் செங் ஹூ தலைமையிலான மலேசியக் குழு முதல் இரு ஆட்டங்களில் லாவோஸ் மற்றும் கம்போடியாவை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வியட்னாமுடன் ஆடிய ஏழு ஆட்டங்களில் மலேசியா சந்தித்த ஆறாவது தோல்வி இதுவாகும்.

 


Pengarang :