ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வீணாகும் நீரின் அளவு 28.1 விழுக்காடாகப் பதிவு- ஆயர் சிலாங்கூர் தகவல்

ஷா ஆலம், டிச 14- சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயாவில் பயனற்றுப் போகும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் அளவு நவம்பர் மாதம் வரை 28.1 விழுக்காடாகப் பதிவாகியுள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் நிர்ணயித்துள்ளபடி பயனற்றுப் போகும் நீரின் அளவை 28 விழுக்காடாக குறைக்க முடியும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார். தீவிர நடவடிக்கைகளின் வாயிலாக அந்த இலக்கை இவ்வாண்டு இறுதிக்குள் அடைய முடியும் என்று அவர் சொன்னார்.

உடைந்த குழாய்களை மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்றும்  அவர் நம்பிக்கைத்  தெரிவித்தார். சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய அந்த மூன்று பகுதிகளிலும் பயனற்றுப் போகும் நீரின் அளவை அடுத்தாண்டில் 27 விழுக்காடாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார். கடந்தாண்டில் வீணாகும் அளவை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் 28.6 விழுக்காடாக குறைத்தது. இக்காலக்கட்டத்தில் பயனற்றுப் போகும் நீரின் அளவை 29.2 விழுக்காடாக குறைக்க ஸ்பான் இலக்கு நிர்ணயித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :