ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

பாதிக்கப்பட்ட பகுதிகளில்  நீர் விநியோகம் இன்றிரவு வழக்க நிலைக்கு திரும்பும்

ஷா ஆலம், டிச 17  - சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் ஏற்பட்ட அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை இன்று இரவுக்குள் முழுமையாக சீரடையும் என்று ஆயர் சிலாஙகூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீரில் துர்நாற்றம் வீசவில்லை என்பது கண்டறியப்படாததைத் தொடர்ந்து  சுங்கை செமினி  நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவதாக  அந்நிறுவனம் கூறியது.

சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட நீரை பயனீட்டாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இன்றிரவு 11.30 மணியளவில் அனைத்து 463 பகுதிகளிலும் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆயர் சிலாங்கூர்   அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 81 டேங்கர் லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.

நீர் விநியோகத் தடை ஏற்பட்ட பகுதிகள் குறித்த விபரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் முகநூல், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Pengarang :