ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய  மாநில அரசாங்கம் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டம்

ஷா ஆலம், டிசம்பர் 16 - இதுவரை சிலாங்கூர் அரசின்  செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் மொத்தம் 5,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மாநிலத்தின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதில் சிலாங்கூர் மக்கள் கொண்டிருக்கும் போராட்ட மனப்பான்மைக்கு இது ஒரு சான்றாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநில மக்கள்  கோவிட்-19 தொற்றுக்கு எதிராக உரிய பாதுகாப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய  மாநில அரசாங்கம் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டம் மூலம் இலவச ஊக்கத் தடுப்பூசிகளை லழங்குகிறது என்று தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 13 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 33,358 சிலாங்கூர் மக்கள் செலங்கா செயலி வாயிலாக ஊக்கத் தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்துள்ளனர். இது பொது மக்களின் ஊக்கமளிக்கும் ஆதரவைக் குறிக்கிறது என்றார் அவர்.

கடந்த டிசம்பர் 8 ஆம்  தேதி தொடங்கப்பட்ட ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு மாநில அரசு  157,000 தடுப்பூசிகளை  இலவசமாக வழங்கியுள்ளது.

 இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற  18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் அருகிலுள்ள செல்கேர் கிளினிக்கில் ஊக்கத் தடுப்பூசிகளைப் பெறலாம்.

செல்வேக்ஸ் ஊக்கத் தடுப்பூசி வழங்கும் கிளினிக்குகளின் பட்டியலை https://selcareclinic.com/our-clinics/ என்ற

Pengarang :