ECONOMYHEADERADNATIONALPBT

வெள்ளம் காரணமாக கிள்ளான் துறைமுக நடவடிக்கைள் பாதிப்பு

வெள்ளம் காரணமாக கிள்ளான் துறைமுக நடவடிக்கைள் பாதிப்பு

 

ஷா ஆலம், டிச 18- சிலாங்கூரின் பல பகுதிகளில் நேற்று முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக கிள்ளான் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் துறைமுக வாரியம் கூறியது.

நோர்த் போர்ட், சவுத் போர்ட், வெஸ்ட் போர்ட் ஆகிய துறைமுகங்களில் உள்ள கிடங்குகள் மற்றும் கொள்கலன் மையங்களில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டள்ளது. துறைமுகங்களுக்கு செல்லும் சாலைகள் பழுதடைந்ததால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது என்று அது தெரிவித்தது.

வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட காரணத்தால் பெரும்பாலான ஊழியர்களால் வேலைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொள்கலன்களின் போக்குரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த சில தினங்களுக்கு சரக்கு விநியோகப் பணிகளை ஒத்தி வைக்க வேண்டி வரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் அதிமான கப்பல்கள் வரும் என எதிர்பார்ப்படும் நிலையில் கடுமையான வானிலை காரணமாக கப்பல் போக்குவரத்திலும் நெரிசல் காணப்படுவதோடு கப்பல்கள் கரையை அணைவதிலும் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், துறைகப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய துறைமுக சரக்கு விநியோக நிறுவனங்களுடன் அணுக்கமான ஒத்துழைப்பு தமது தரப்பு நல்கும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

சரக்குகளைக் கையாள்வதில் உணவுப் பொருள்கள், மருந்துகள் மற்றும் உறையவைக்கப்பட்ட பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த வாரியம் கூறியது.


Pengarang :