ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

தற்காலிக தங்குமிடம் உணவு வேண்டுவோர் தொடர்புக்கு- உதவும் மையங்கள்

ஷா ஆலாம், டிச.19: கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினரும், சுமையைக் குறைக்கவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர்.

உதவி என்பது அடிப்படைத் தேவைகளுக்கான பங்களிப்புகளில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், தங்குமிடம் மற்றும் தற்காலிக வெளியேற்றம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இங்கு வழங்கப்படும் தங்குமிடம் மற்றும் தற்காலிக உணவு, உடை போன்றவைகளை வழங்கி வருவது: –

ஷா ஆலம் மாநில மசூதி சிக்கித் தவிப்பவர்களை தங்க வைக்க இடம் வழங்குகிறது. சாப்பாடு மற்றும் பானங்களும் கிடைக்கும் .

சிலாங்கூர் பொது நூலகக் கழகம், ஷா ஆலமின் 13வது பிரிவில் புஸ்தக ராஜா துன் உடாவை ஒரு தங்குமிடமாக வழங்குகிறது. ஒரு கஃபேவும் திறக்கப்பட்டுள்ளது. 03 5519 7667 ஐ அழைக்கவும் .

ஷா ஆலம் செக்சன் 13ல் சுராவ் அல்-முனவ்வரா, ஷா ஆலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடத்தைத் திறந்துள்ளது. அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் உணவு வழங்கப்படுகிறது.

குத்வாரா ஷா ஆலம் அதன் வளாகத்தின் முதல் தளத்தில் 10, ஜாலான் 18/49, 40200, ஷா ஆலம் தங்குமிட வசதிகளை வழங்குகிறது. 012 379 0124 (பெல்பீர் சிங்) –

தோம்ஸன் மருத்துவமையம் கோத்தா டாமன்சாரா அதன் பயன்படுத்தப்படாத வார்டுகளை தற்காலிக தங்குமிடமாக தேவைப்படும் நபர்களுக்கு வழங்குகிறது. 03 6287 1111 ஐ அழைக்கவும் .

லெம்பா ஜெயா DUN ஒன் ஸ்டாப் பேரிடர் மையம் வெள்ளத்திற்கு ஆயத்தமாக திறக்கப்பட்டது. இந்த வளாகம் டேவான் MPAJ லெம்பா ஜெயாவில் அமைந்துள்ளது. தொடர்புக்கு இமாம், 017 879 2399


Pengarang :