ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7 மாநில மக்களுக்கு நிலைமை மீட்சிப்பெறவில்லை- பிரதமர்

கோலாலம்பூர், டிச.19– இன்று நண்பகல் நிலவரப்படி,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலை நன்றாக இல்லை, பேராக் இயற்கையின் கடும் மிரட்டலை எதிர்நோக்கியுள்ள வேளையில்,கிளந்தான், திரங்கானு, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் வெள்ள நிலை மோசமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில், 21,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் இருந்து நிவாரண மையங்களுக்கு இன்று மதியத்திற்குள் வெளியேற்றப்பட்டனர். நேற்றிரவு சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் முன்னுரிமை அளித்த பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்,  இன்று இரண்டு நிவாரண மையங்களை பார்வையிட்டார்.

– ஜோகான் சித்தியா மற்றும் தொலுக் கோங் தேசிய பள்ளிகளில்  செயல்படும் நிவாரண மையங்களை பார்வையிட்டார்.

சிலாங்கூரில் உள்ள கிள்ளான், கோலா லங்காட், பெட்டாலிங், சிப்பாங், கோலா சிலாங்கூர் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் உள்ள 80 நிவாரண மையங்களில் மொத்தம் 6,242 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிலாங்கூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் (MET Malaysia) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Pengarang :