ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் ஒரே நாளில் 2,800 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், டிச 25- சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரே நாளில் 2,857 டன் அளவு வீட்டு தளவாடப் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் அகற்றியுள்ளது.

குப்பைகளை அகற்றும் பணியை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக பெரிய அளவிலான குப்பை தோம்புகளும் கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நேற்று மட்டும் 2,857 டன் எடை கொண்ட குப்பைகளும் கழிவுகளும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டன. துப்புரவு பணிக்காக நாங்கள் தளவாடங்களையும் இயந்திரங்களையும் அதிகரிக்கவுள்ளோம் என்றார் அவர்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து குப்பைகளை அகற்றும் பணியை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மென்ட்  நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டங் கட்டமாக மேற்கொண்டு வருகிறது. இப்பணி இன்னும் ஒரு வார காலத்தில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த துப்புரவுப் பணியை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக இதர மாநிலங்களிலுள்ள ஊராட்சி மன்றங்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியையும் சிலாங்கூர் பெற்றுள்ளது.


Pengarang :