Dato’ Menteri Besar, Dato’ Amirudin Shari (dua, kanan) menerima sumbangan bersama daripada Pengurus Urusan China Communications Costruction, Kong Qi (tengah) dan Ketua Pegawai Eksekutif malaysia Rail Link Sdn Bhd, Datuk Sri Darwis Abdul Razak (dua, kiri) ketika Majlis serahan tabung bantuan ikhtiar Selangor Bangkit siri kedua di Pejabat Dewan Negeri Selangor, Shah Alam pada 31 Disember 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

வெள்ள மீட்சி நிதிக்கு வெ. 18 லட்சத்தை சிலாங்கூர் பெற்றது

ஷா ஆலம், டிச 31- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட இக்தியார் சிலாங்கூர் பங்கிட் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 18 லட்சம் வெள்ளி நன்கொடையாக பெறப்பட்டது.

வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த நிதிக்கு பல வர்த்தக நிறுவனங்கள் இந்த நிதியுதவியை செய்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த நிதியைக் கொண்டு மக்கள் நலன் காப்புத் திட்டங்களையும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்சித் திட்டங்களையும் மேற்கொள்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

டி.எச்.சி. சென். பெர்ஹாட், டபள்யு.சி.டி. ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், நிர்வாணா ஆசியா குரூப், மலேசிய தொழிற்சாலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சிலாங்கூர், கோலாலம்பூர் கிளை, மலேசிய ரெயில் லிங்க் சென். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களிடமிருந்து இந்த நிதி கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 18 ஆம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு இக்தியார் சிலாங்கூர் பங்கிட் நிதித் திட்டத்தை ஆரம்பித்தது.


Pengarang :