ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோல லங்காட்டில் உடைந்த தடுப்பணைகள் சரி செய்யப்பட்டன

கோல லங்காட், ஜன 4- கோல லங்காட் மாவட்டத்தின் லபோஹான் டாகாங் மற்றும் கம்போங் ஆர்.டி.பி. புக்கிட் சங்காங்கில் ஏற்பட்ட தடுப்பணை உடைந்த சம்பவங்கள் நேற்று  மாலைக்குள் சரி செய்யப்பட்டன.

அந்த தடுப்பணைகள் உடைந்தது தொடர்பில் நேற்று காலை 10.00 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து நான்கு இயந்திரங்களின் உதவியுடன் அதனை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்ட்டதாக வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) கூறியது.

அந்த தடுப்பணையை சரி செய்து வலுப்படுத்தும் பணியை ஜே.பி.எஸ். மேற்கொண்டது. சுங்கை லங்காட் தடத்தில் நீர் பெருக்கெடுக்கும் சம்பவங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்று அது தெரிவித்தது.

எனினும், அப்பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுன் இருக்க வேண்டும் என்பதோடு அதிகாரிகளின் உத்தரவையும் பின்பற்றி நடக்க வேண்டும் என ஜே.பி.எஸ். வலியுறுத்தியது.

வெள்ளம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளை publicinfobanjir.water.gov.my, பேஸ்புக்: Jabatan Pengairan dan Saliran Malaysia –Dept. of Irrigation and Drainage மற்றும்   twitter @DID_Malaysia, ஆகிய சமூக ஊடகங்கள் வழி தெரிந்து கொள்ளலாம்.

 

 

 


Pengarang :