ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 41,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், ஜன 4– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளிலிருந்து கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி இதுவரை 41,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

மிக அதிகமாக அதாவது 16,503 டன் குப்பைகள் ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து அகற்றப்பட்டதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கூறியது.

எனினும் இப்பகுதியில் நேற்று வரை 80 விழுக்காட்டு துப்புரவுப் பணிகள் மட்டுமே முழுமை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

ஊராட்சி மன்ற நிலையில் அகற்றப்பட்ட குப்பைகளின் அளவு வருமாறு-

– சுபாங் ஜெயா மாநகர் மன்றம்- 7,411 டன் (82 விழுக்காட்டுப் பணிகள் பூர்த்தி)

– கிள்ளான் நகராண்மைக் கழகம்- 6,060 டன் (85 விழுக்காட்டுப் பணிகள் பூர்த்தி)

– காஜாங் நகராண்மைக் கழகம்- 5,820 டன் (100 விழுக்காட்டுப் பணிகள் பூர்த்தி)

 


Pengarang :