ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONALPBT

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 415 பேர் 1,000 வெள்ளி வெள்ள உதவித் தொகையைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜன 9- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சேர்ந்த 415 குடும்பத்தினர் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர்.

கம்போங் அசாகான், கம்போங் புக்கிட் கூச்சிங், கம்போங் தஞ்சோங் சியாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த உதவியைத் தொகையைப் பெற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த உதவித் தொகையைப் பகிர்ந்தளிக்கும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு நேற்று முடிவுக்கு வந்தது என்றார் அவர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதில் மாநில அரசின் இந்த உதவி ஓரளவு உதவி புரியும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 10 கோடி வெள்ளி  நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை சரி செய்வது தவிர்த்து இப்பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படும்.


Pengarang :