ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கோலக் கிள்ளான் தொகுதியைச் சேர்ந்த 1,500 பேர் வெள்ள உதவி நிதியைப் பெற்றனர்

கிள்ளான், ஜன 12- கோலக் கிள்ளான் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 பேர் மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர்.

உதவித் தொகை பெற்றவர்களில் 70 விழுக்காட்டினர் பூலாவ் இண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் எஞ்சியோர் தெலுக்கோங் பகுதி குடியிருப்பாளர்கள் என்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.

சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகை தவிர்த்து மத்திய அரசின் உதவித் தொகையான 1,000 வெள்ளியையும் பாதிக்கப்பட்டவர்கள் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

வழங்கப்படும் இந்த உதவித் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடாகாது, என்ற போதிலும் இந்த இக்கட்டான சூழலில் இந்த உதவி ஓரளவு அவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்றார் அவர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்  நோக்கில் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது. 

 

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பொருள் சேதம் ஏற்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.

 

Pengarang :