ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிபட்டால் உரிமையாளருக்கு வெ.1.500 அபராதம்

ஷா ஆலம், ஜன 15- பொது இடங்களில் சுற்றித் திரியும் வளர்ப்பு பிராணிகள் பிடிபடும் பட்சத்தில் அதன் உரிமையாளருக்கு ஒவ்வொரு பிராணிக்கும் தலா 1,500 வெள்ளி வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று காஜாங் நகராண்மைக் கழகம் எச்சரித்துள்ளது.

காஜாங் நகராண்மைக் கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரியும் பிரச்னையைக் களையும் நோக்கிலான இந்த திட்டம் நேற்று தொடங்கி அமலுக்கு வந்ததாக நகராண்மைக் கழகம் கூறியது.

காஜாங் நகராண்மைக் கழக பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை. கால்நடைகளைப் பிடிக்கும் இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது என்று  பேஸ்புக் பக்கத்தில் அது குறிப்பிட்டுள்ளது.

பிடிபடும் ஒவ்வொரு கால்நடைக்கும் தலா 1,500 வெள்ளி அபராதம் அதன் உரிமையாளருக்கு விதிக்கப்படும் என்றும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

சுற்றித் திரியும் கால் நடைகள் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக இந்த நடவடிக்கை தினமும் மேற்கொள்ளப்படும் என்றும் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.


Pengarang :