D
ECONOMYMEDIA STATEMENTPBTPENDIDIKAN

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் ஏழு சாலைகள் மூடப்படும்

ஷா ஆலம், ஜன 17- தைப்பூசத்தை முன்னிட்டு பத்துகேவ்ஸ், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தைச் சுற்றியுள்ள ஏழு சாலைகள் நேற்று தொடங்கி இம்மாதம் 21 ஆம் தேதி வரை போக்குவரத்துக்கு மூடப்படுகின்றன.

வாகனமோட்டிகளுக்கு சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தரும் இந்நோக்கில் இச்சாலைகள் தினசரி இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை மூடப்படுவதாக கோம்பாக் மாவட்ட போலீசார் கூறினர்.

அப்பகுதியில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் பணியில் 318 போலீஸ் அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் ஈடுபடுவர் என்று பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் மாவட்ட போலீஸ் துறை தெரிவித்தது.

இதனிடையே, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது நேற்று பத்துமலை வளாகத்தில் பாதுகாப்பு தொடர்பான  ஆய்வினை மேற்கொண்டார்.

இந்த பெருநாள் காலத்தின் போது சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பின்பற்றி நடக்கும்படி பக்தர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

தைப்பூசத்தின் போது மூடப்படும் சாலைகள் பின்வருமாறு-

– பத்துகேவ்ஸ் கம்போங் மிலாயு சாலை சந்திப்பு

– எம்ஆர்ஆர் 2 சாலையிலிருந்து பத்துமலைத் திருத்தலம் செல்லும் சாலை

– ஜாலான் பத்துகேவ்ஸ் லாமா முதல் ஆலய நுழைவாயில் வரையிலான பகுதி

– பத்துகேவ்ஸ் ஷெல் எண்ணெய் நிலையம் முன்புறம் உள்ள சமிக்ஞை விளக்கு பகுதி

– ஜாலான் எஸ்.பி.சி. 8/ ஜாலான் லாமா பத்துகேவ்ஸ் முச்சந்தி

– ஸ்ரீ கோம்பாக்கிலிருந்து எம்ஆர்ஆர்2 சாலையின் வெளியேறும் பகுதி தொடங்கி பத்துகேவ்ஸ் தொழில்பேட்டை பகுதியில் வெளியேறும் பகுதி வரை

– ஜாலான் பெருசஹான் முதல் பத்துகேவ்ஸ் ஆலயம் செல்லும் சாலை


Pengarang :