ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

  40  லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இயல்பாக வாக்காளர்களாகப் பதிவு

கோத்தா பாரு, ஜன 22 –  இவ்வாண்டு ஜனவரி 16 ஆம் தேதி வரை 18 வயதுடைய 40 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இயல்பாக வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

அரசாங்கம் எப்போதும் இளைஞர்களின் பங்களிப்பிற்கு மதிப்பளிப்பதோடு இந்த அங்கீகாரத்தின் வழி 2019 ஆம் ஆண்டில்  அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் வாக்களிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி 16 ஆம் தேதி வரை 18 வயதுடைய நாற்பது லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இயல்பாக வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோன்.

மலேசிய இளைஞர் சங்கங்களின் சங்கம் (எம்.ஏ.ஒய்.சி.) போன்ற இளைஞர் அமைப்புகள் இந்த ஜனநாயக செயல்முறையின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நான் நம்புகிறேன். என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற எம்.ஏ.ஒய்.சி.யின  60 ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்துடன் கூடிய இரவு விருந்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ அகமது யாக்கோப் மற்றும் எம்.ஏ.ஒய்.சி. தலைவர் முகமட் சியாபுடின் ஹாஷிம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Pengarang :