ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

மதிப்பீட்டு வரியைச் செலுத்தி காரை பரிசாக வெல்லுங்கள்-  அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அழைப்பு.

ஷா ஆலம், ஜன 24– அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதன் மூலம் காரை வெல்வதற்குரிய வாய்ப்பு அம்பாங் ஜெயா மக்களுக்கு கிடைத்துள்ளது.  

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் 30ஆம் ஆண்டு நிறைவையொட்டி அதிர்ஷ்டக் குலுக்கின் மூலம் 300,000 வெள்ளி மதிப்பிலான பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்கு வழங்கப்படுவதாக நகராண்மை கழகம் தனது பேஸ்புக் மூலம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்கான வழி முறை எளிதானது. 2022 ஆம் ஆண்டிற்கான  அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் மதிப்பிட்டு வரியை https://icomm.mpaj.gov.my  என்ற அகப்பக்கம் மூலம் செலுத்துவதன் மூலம் இதில் பங்கேற்கலாம். அல்லது, கூகுள் பிளேய் அல்லது ஏப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

முதல் தவணைக்கு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரையிலும் இரண்டாம் தவணைக்கு  ஜூலை 1 முதல் ஆகஸ்டு 31 வரையிலும் இந்த அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கேற்கலாம்.

மேல் விபரங்களுக்கு www.mpaj.gov.my. என்ற அகப்பக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :