ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஹாங்காங்கில் மலேசியாவுக்கு மீண்டும் 250 கோடிக்கு பட்டை நாமமா? விளக்குமாறு அமைச்சரிடம் அன்வார் வலியுறுத்தினார்

ஷா ஆலம், ஜனவரி 27:  திவாலான கெந்திங் ஹாங்காங் பயணக் கப்பல் நிறுவனத்திற்கு   600 மில்லியன் அமெரிக்க டாலர் (RM2.51 பில்லியன்) பாதுகாப்பற்ற கடனளித்தது  குறித்து பதிலளிக்க டத்தோ ஶ்ரீ அன்வார் நிதியமைச்சரை வலியுறுத்தினார்.

இந்த வங்கிகள் ஏன் “கெந்திங் ஹாங்காங்கிற்கு’’ பாதுகாப்பற்ற கடன்களை வழங்க அனுமதிக்கப் படுகின்றன என்ற கேள்விக்கு நிதியமைச்சரை  உடனடியாக பதிலளிக்க வலியுறுத்துகிறேன்,” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

முக்கிய அரசாங்க முதலீட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான மலேசியாவில் உள்ள மூன்று பெரிய வங்கிகள் எப்படி “இவ்வளவு எளிதாக” கடன் கொடுக்க முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.

கப்பல் நிறுவனம் கடனை எவ்வாறு செலுத்தும் என்பதனை துங்கு டத்தோஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் துங்கு அப்துல் அஜீஸ் விளக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

“என்னைப் பொறுத்தவரை, பூமிபுத்ரா மலேசியா ஃபைனான்ஸ் (பிஎம்எஃப்) ஹாங்காங் ஊழல் மீண்டும் நிகழாமல் தடுக்க இந்த விளக்கம் விரைவுபடுத்த வேண்டும்” என்று அவர் இன்று பேஸ்புக் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.

கடந்த 1982 ம் ஆண்டில் ஹாங்காங்கில்  மலேசியாவிற்கு சொந்தமான 2.5 பில்லியன் ரிங்கிட் பண மோசடி நடந்ததை அன்வார் குறிப்பிட்டார். அதில் பேங் பூமிபுத்ரா வங்கியின் ஆடிட்டர் ஜலீல் இப்ராஹிம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த செய்தி நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மே பேங்  பெர்ஹாட் கெந்திங் ஹாங்காங் நிறுவனத்தின்  திவாலால் தனது நிதி நிலை  பாதிக்கப்பட்டுள்ளதை மறுத்துள்ளது.

அதே நேரத்தில் ஆர்.எச்.பி (RHB) வங்கியும் போதுமான பணப்புழக்கம் மற்றும் மூலதனம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளது.*


Pengarang :