LANGKAWI, 27 Mac — Pasukan pesawat Jupiter ketika melakukan pertunjukan udara pada pameran Aeroangkasa dan Maritim Antarabangsa Langkawi 2019 (LIMA’19) edisi ke-15 di Pusat Pameran Antarabangsa Mahsuri (MIEC) hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

2022 சிலாங்கூர் வான் கண்காட்சியில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்- டத்தோ தெங்

ஷா ஆலம், ஜன 28- இவ்வாண்டு நவம்பர் மாதம் 8 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் சிலாங்கூர் வான் கண்காட்சி கடந்த 2021 கண்காட்சியைவிட மேலும் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் வான் போக்குரத்து துறையைச் சேர்ந்தவர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் விமான சாகச நிகழ்வும் இம்முறை நடத்தப்படும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

கடந்தாண்டு இந்நிகழ்வை நடத்தியதன் மூலம் போதுமான அளவு அனுபவத்தை பெற்றுவிட்டோம். ஆகவே இம்முறை அதிகளவிலான மக்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக நமது முயற்சிகளை இரட்டிப்பாக்கவுள்ளோம் என்றார் அவர்.

இம்முறை நடைபெறும் கண்காட்சி பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அளவில் மட்டும் சிறப்பானதாக இருக்காது. அதையும் தாண்டி விமானங்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைக்காமல் வான் சாகசங்களையும் இம்முறை நிகழ்த்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :