ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு  கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நிதியுதவி

ஷா ஆலம், ஜன 28- கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உதவ கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் 60,000 வெள்ளியை செலவிட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக நிறுவன சமூக கடப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்நிதி வழங்கப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

ஏற்கனவே பல நிறுவனங்களுக்கு இதேபோல் உதவிகளை நல்கியுள்ளோம். வழங்கும் தொகை அதிகமாக இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஒரளவு குறைக்க இந்த உதவி துணை புரியும் என நம்புகிம் என்று அவர் சொன்னார்.

இந்த உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீடியா சிலாங்கூர் பணியாளர்களுக்கு 10,000  வெள்ளியைத் தாங்கள் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் மீடியா சிலாங்கூர் பணியாளர்கள் 13 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி முகமது ஃபாரிட் அஸ்ரி கூறினார்.

இந்தப் பேரிடரில் பலர் வீட்டு  தளவாடங்கள் மற்றும் உடமைகளை இழந்தனர். அதோடு மற்றுமின்றி இந்த வெள்ளம் அவர்களுக்கு மனோரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று அவர் தெரிவித்தார்.

Pengarang :