ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

சுற்றுச்சூழலை பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சேகரிக்கும் பணியில் டீம் சிலாங்கூர்

ஷா ஆலம், ஜன 29- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை சேகரிக்கும் நடவடிக்கையில் டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

எண்ணெய்க் கழிவுகளை கால்வாய்கள், நீரோட்டக் குழாய்கள் மற்றும் வடிகால்களில் வெளியேற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாஹைசெல் கெமான் கூறினார்.

தேந்தெடுக்கப்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சேமித்து வைப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு போத்தல்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவற்றை நாங்கள் சேகரிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

சமுதாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகபெரிய பயனைத் தரக்கூடிய இத்திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டில் இதேபோன்ற இயக்கம் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், குவாங், காஜாங், உலு பெர்ணம், தாமான் மேடான் ஆகிய பகுதிகளிலிருந்து 520 லிட்டர் சமையல் எண்ணெய்யை 92 டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள் சேகரித்த தாக குறிப்பிட்டார்.


Pengarang :