ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர்  மாநில தேர்தலில் 2.57 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்

ஜோகூர் பாரு, ஜன. 30: விரைவில் நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) பதிவு செய்யப்பட்ட 2.599 மில்லியன் வாக்காளர்களில் மொத்தம் 2.576 மில்லியன் சாதாரண வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மொத்தத்தில், 22,536 பேர் முன்கூட்டியே வாக்களிப்பவர்கள்,   இதில் 10,958 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள், 11,578 பேர் போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள்.

ஜனவரி 17 அன்று எஸ்பிஆர் ரால் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, அனைத்து மாநில சட்டமன்ற  தொகுதிகளிலும் வாக்களிக்க வர இயலாத வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 376 ஆகும்.

வாக்காளர்கள் பதிவு மறுஆய்வு போர்டல் வழி https://pengundi.spr.gov.my., MySPR சோதனை விண்ணப்பம் மற்றும் 03-88927018 மூலம் எஸ்பிஆர்   ஹாட்லைன் மூலம் ஆரம்பச் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 749,731  பேர்,  இயல்பான வாக்காளர்கள் ஆனதை  தொடர்ந்து ஜோகூரில் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிப்ரவரி 9 அன்று சிறப்புக் கூட்டத்தை நடத்திய பிறகு, ஜோகூர் பிஆர்என் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Pengarang :