Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari menyerahan bantuan Selangor Bangkit (BSB) kepada mangsa banjir di Balai Penghulu Mukim Batu, Gombak pada 30 Disember 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5.4 கோடி வெள்ளி விநியோகம்

ஷா ஆலம், பிப் 1- பந்துவான்  சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி வெள்ள உதவித் தொகையை நேற்று வரை 53,908 பேர் பெற்றுள்ளனர். 

இந்த உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடியே 40 லட்சத்து 38 ஆயிரம் வெள்ளி செலவிட்டப்பட்டுளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை 5 கோடியே 40 லட்சத்து 38 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழி மொத்தம் 53,908 பேர் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.

மேலும், வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக சீனப்புத்தாண்டையொட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

இப்போது நாம் வெள்ளத்தில் சேதமடைந்த மாநிலச் சாலைகள், தொலைத் தொடர்பு வசதிகள், வடிகால்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைக்கும் கட்டத்தில் நுழைந்துள்ளோம் என்று அவர் மேலும் சொன்னார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பஙகிட் திட்டத்தை தொடக்கியது.

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளியும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.

Pengarang :