ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ள நிவாரண நிதி விரைவாக விநியோகம்- பாடாங் ஜாவா மக்கள் பாராட்டு

கிள்ளான், பிப் 2-  கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் நிதி வழங்குவது எளிதான முறையில் பேற்கொள்ளப்பட்டதாக பாடாங் ஜாவா வட்டார குடியிருப்பாளர்கள் கூறினர்.

வெள்ளத்தில்  சேதமடைந்த பொருள்களுக்கு பதிலாக புதிய பொருள்களை வாங்குவதற்கு இந்த உதவித் தொகை பெரிதும் துணை புரிந்ததாக பாதுகாலரான அஸ்மான் அப்துல் சமாட் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் உதவி நிதி விரைவாக கிடைக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

இதனிடையே, நேற்று முன்தினம் வரை 1,500 வெள்ள உதவி நிதி விண்ணப்பங்கள் கிள்ளான் மாவட்ட நில அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கிராம சமூக நிர்வாகத் தலைவர் பட்ஸில்லா ஹஷிம் கூறினார்.

முதல் கட்டமாக இப்பகுதியைச் சேர்ந்த 300 பேர் மாநில அரசின் உதவித் தொகையைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் திட்டத்தை மாநில அரசு தொடக்கியது.


Pengarang :