ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

மேரு தொகுதியில் 11,000 பேர் வெள்ள உதவி நிதிக்கு விண்ணப்பம்- 40 விழுக்காட்டினர் நிதி பெற்றனர்

காஜாங், பிப் 8– வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்திற்கு மேரு தொகுதியைச் சேர்ந்த 11,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது பக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

அவர்களில் சுமார் 40 விழுக்காட்டினருக்கு மட்டுமே இதுவரை 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். இன்னும் உதவித் தொகை கிடைக்காதவர்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்ட அவர், உதவித் தொகையை விரைந்து வழங்குவதற்கான முயற்சியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றார்.

ஏமாற்று நடவடிக்கை மற்றும் ஒரே குடும்பத்தில் பல விண்ணப்பங்கள் போன்ற பிரச்சனைகளால் இந்த நிதியளிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போதை சூழ்நிலையில் அனைவரும் நெருக்கடியில் உள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம். உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி நிச்சயம் வழங்கப்படும என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற ஹலால் உணவுத் துறை ஆய்வரங்கின் தொடக்க நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 10 கோடி வெள்ளி நிதியில் மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.


Pengarang :