ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் வெள்ளத்தை சமாளிப்பதற்கான விரிவானத் திட்டம் இம்மாதம் தாக்கல் செய்யப்படும்

ஷா ஆலம், பிப் 9– லங்காவி தீவில் இம்மாதம் 23 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் ஆட்சிக்குழு துணை மாவட்ட திட்டத்தில் தாக்கல் செய்யப்படும் வெள்ளத்திற்கு தீர்வு காணும் அம்சங்களில் குளங்கள், வடிகால்கள் மற்றும் நீரை வெளியேற்றும் இடங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

வெள்ளத்தை குறைக்கக்கூடிய அல்லது அப்பேரிடர் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்யக்கூடிய முக்கிய மூன்று அம்சங்களாக அவை விளங்குவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

நீர் வளங்கள் உள்ளிட்ட விரிவான தீர்வுக்கான வழியை தாக்கல் செய்யும்படி மந்திரி புசார் என்னைப் பணித்துள்ளார். தீர்வுக்கான வழியை கண்டறிவதில் எந்த முக்கிய அம்சத்தை விட்டு விடக்கூடாது என்பதால் அனைத்து தரப்பினரின் கருத்தையும் நாம் பெறவிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரத்தில் வடிகால் மற்றும் நீர்பாசனத்துறை, லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம், கனிம வள மற்றும் புவி அறிவியல் துறை, கிள்ளான் ஆற்றை நிர்வகிக்கும் லண்டாசான் லுமாயான் நிறுவனம் ஆகிய தரப்பினரின் கருத்துகள் பெறப்படும் என அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகள் துறையின் கீழுள்ள துறைகள் மற்றும் நிறுவனங்களின் 700 ஊழியர்களுக்கு இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் உதவி நிதியை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் ஆயிரக்கணக்னோர் பாதிக்கப்பட்டதோடு 13 பலியாகினர்.


Pengarang :