ECONOMYMEDIA STATEMENTPBTPENDIDIKAN

தாமான் டெம்ப்ளர் தொகுதி ஏற்பாட்டில் 1,000 மாணவர்களுக்கு பள்ளி உதவிப் பொருள்கள் விநியோகம்

ஷா ஆலம், பிப் 9– வரும் மார்ச் மாதம் பள்ளித் தவணை தொடங்கவுள்ளதை முன்னிட்டு தாமான் டெம்ப்ளர் தொகுதியைச் சேர்ந்த சுமார் 1,000 ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உதவிப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்திற்காக தொகுதி சார்பில் 30,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார். மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு தலா 30 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பத்தினரின் சுமையைக் குறைக்கும் நோக்கிலும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் அந்த பற்றுச் சீட்டுகளை ஒப்படைக்கும் பொறுப்பு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம சமூக மன்ற பிரதிநிதிகள், கூட்டு நிர்வாக மன்ற பொறுப்பாளர்களிடம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்காக பெக்காவனிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல இயக்கம் மற்றும் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்திடமிருந்தும் தாங்கள் உதவி பெற்றுள்ளதாக அவர் கூறினார்.


Pengarang :