ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தொற்று குறித்து நடவடிக்கை விவாதிக்க அடுத்த வாரம் கூட்டம் – ஆட்சிக்குழு உறுப்பினர்

பெட்டாலிங் ஜெயா,பிப் 14: கோவிட்-19 நோய்த்தொற்று பற்றிய துல்லியமான விவரத்தைப் பெறுவதற்கு மாநில அரசு அடுத்த வாரம் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையை சந்திக்கும்.புதிய கிளஸ்டர்கள்,  தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்கான  வழிமுறை, ஊக்க தடுப்பூசிகள் மற்றும் மாநில திட்டங்கள் மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகள் பற்றிய பிரச்சினையையும் விவாதங்கள் உள்ளடக்கியதாக  இருக்கும் என  பொது சுகாதார  ஆட்சிகுழு  உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மலேசியாவின் சுகாதார அமைச்சகத்தின் ஒரு பகுதியாக ஜேகேஎன்எஸ் உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையும் அவர்களிடம் உள்ளது. அவர்கள் எங்களுக்கு விளக்கமளித்த பின், நாங்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியும்,என்று அவர் கூறினார்.

இன்று எம்.பி.பி.ஜே டமான்சரா டாமாய் சமூகக் மண்டபத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்கான இலவச எச்.பி.வி பி.சி.ஆர் பரிசோதனை திட்டத்தில் அவர் சந்தித்தார். இதற்கிடையில், சிலாங்கூர் தடுப்பூசி (செல்வாக்ஸ்) திட்டத்தின் கீழ் சினோவேக் தடுப்பூசி பெறுபவர்கள் தொற்றுநோய் பரவுவதை தடுக்க ஒரு ஊக்க தடுப்பூசியை எடுக்க உடனடியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்று டாக்டர் சித்தி மரியா கூறினார்.

மாநில அரசிடம் (செலங்கா) திட்டத்தில் தடுப்பூசி  பெற்றவர்கள் விவரங்கள் உள்ளது. எனவே, ஊக்க தடுப்பூசியை யார் எடுக்கவில்லை என்று கண்டுபிடித்து தொற்று நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினசரி கோவிட்-19 நோய்த் தொற்றுகள் 1,730 ஆக இருந்து 21,072 ஆகக் குறைந்துள்ளது, தீவிர நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக உள்ளது. 99.59 விழுக்காட்டினர் அல்லது 20 ஆயிரத்து 986 பேர் பிரிவு 1 (அறிகுறிகள் இல்லை) மற்றும் 2 (லேசான அறிகுறிகள்) மற்றும் மீதமுள்ளவர்கள் 3, 4 மற்றும் 5 ஆகிய பிரிவுகளில் இருந்தனர் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.


Pengarang :