ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

பள்ளி உதவிப் பொருள்களைப் பெற மேரு தொகுதியிலுள்ள ஏழைகள் விண்ணப்பம் செய்யலாம்

ஷா ஆலம், பிப் 15– சிலாங்கூர் அரசின் 2020 ஆம் ஆண்டின் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் பள்ளி உதவிப் பொருள்களுக்கு விண்ணப்பம் செய்யும்படி மேரு தொகுதியிள்ள வசதி குறைந்தவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வரும் வெள்ளிக்கிழமைக்குள்  தொகுதி சேவை மையத்தில் இதற்கான விண்ணப்பங்களைச் செய்யலாம். முதலாவதாக வரும் 60 பேருக்கு மட்டுமே இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்படும் என்பதால் முன்கூட்டியே இந்த உதவிப் பொருள்களுக்கு விண்ணப்பிக்கும்படி அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மாதம் 2,000 வெள்ளிக்கு குறைவாக குடும்ப வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். அவர்கள் மேரு தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவசியம்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் சிலாங்கூர் மாநில அரசின் பரிவு அன்னையர் உதவித் திட்டம் மற்றும் சிலாங்கூர் ஸக்கத் அறவாரிய அட்டைகளை கொண்டிராதவர்களாக இருத்தல் அவசியம் என்று தொகுதி சேவை மையம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் அடையாளக் கார்டு நகல், விவாகரத்து அல்லது இறப்புச் சான்றிதழ், சம்பள அறிக்கை, கிராமத் தலைவரின் சான்றுக் கடிதம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்ப பாரங்களை கீழ்க்கண்ட தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Pusat Khidmat Masyarakat Meru, No 1, Jalan Nenas Sarawak KU10, Taman Saujana off, Persiaran Hamzah Alang, Klang.


Pengarang :