ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19 நோயாளிகள் 12 வாரங்கள் வரை தொடர்ந்து அறிகுறிகளை எதிர்கொள்ளலாம்

ஷா ஆலம்,பிப் 15: கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகும் 12 வாரங்கள் அல்லது அதற்கும் மேலாக அறிகுறிகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றின் சிக்கல்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக மலேசிய சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்த ‘நீண்ட கோவிட்’ அறிகுறிகள், முன்னாள் கோவிட்-19 நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கின்றன என்பதும், லேசான அல்லது தீவிரமான அறிகுறிகள் உள்ளவர்கள் இதை எதிர்கொள்ளலாம் என்பதும் தெளிவாகிறது.

தடுப்பூசி, நல்ல காற்றோட்டம் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) கடைப்பிடிப்பது தொற்று அபாயத்தைக் குறைக்கும் என்றும் MOH கூறியது. நேற்று, நாட்டில் 21,315 புதிய கோவிட்-19 நோய்தொற்றுகளில் 21,228 பேர் அல்லது 99.59 விழுக்காட்டினர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் உள்ளனர், மேலும் 87 பேர் அல்லது 0.41 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் சுமார் 1 கோடியே 33 லட்சத்து 73 ஆயிரத்து 479 பேர் ஊக்க தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 206,748 சிறார்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.


Pengarang :