Selangor Fruits Valley sedia menerima lebih ramai pengunjung. Foto YB
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிலாங்கூர்  ஃபுரூட் வேலி மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது – கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை

 ஷா ஆலம், பிப் 16: கோலா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயாவில் உள்ள சிலாங்கூர் ஃபுரூட் வேலி பழத் தோட்டம் சுகாதார தூய்மை பணிகளுக்காக இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும்  கோவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்களைத் தொடர்ந்து  இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வேளாண் சுற்றுலா மையம் தெரிவித்துள்ளது. “அதிகரித்து வரும் தொற்றுநோயின் தாக்கம் குறித்து சிலாங்கூர் பழத் தோட்டத் நிர்வாகம்  அக்கறை  கொண்டுள்ளது. “எனவே, சிலாங்கூர் பழத் தோட்டம் முழு பகுதியையும் நச்சுயிரி ரசாயனம் மூலம் தூய்மை செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது,” என்று அவர் பேஸ்புக் மூலம் கூறினார்.

பிப்ரவரி 19 சனிக்கிழமை அன்று மையம் வழக்கம் போல் செயல்படும். சிலாங்கூர் பழத் தோட்டம் கிட்டத்தட்ட 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் பிளிம்பிங், டுரியன், மாம்பழம், கொய்யா, பலாப்பழம், திராட்சை உட்பட 20 வகையான பழத்தாவாரங்கள் உள்ளன.

மேலும் சுவாரஸ்யமானது, தோட்டத்தில் 3,000 க்கும் மேற்பட்ட கெளூட் தேனீ கூடுகள் உள்ளன, இது தீபகற்ப மலேசியாவில் கெளூட் தேன் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.


Pengarang :