ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

புயலில் பாதிக்கப்பட்ட வீடுகளைத் துப்பரவு செய்வதில் காஜாங் நகராண்மைக் கழகம் உதவி

ஷா ஆலம், பிப் 22– கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய புயல் காற்றில் செராஸ், தாமான் கோத்தா செராஸ் மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில்  உள்ள வீடுகளைச்  சுத்தம் செய்வதில் குடியிருப்பாளர்களுக்கு உதவும்படி தனது பணியாளர்களைக் காஜாங் நகராண்மைக் கழகம் பணித்துள்ளது.

இந்தப் பேரிடரில் வீடுகளின் கூரைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதால் தற்காலிக நிவாரண மையங்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று நகராண்மைக் கழகம் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக நகராண்மைக் கழகத் தலைவர்  நஜ்முடின் ஜெமாய்ன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கடந்த திங்கள்கிழமை வருகை புரிந்தார்.


Pengarang :