ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கிள்ளான் ஷா ஆலமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,000 பேருக்கு, RM1,000 உதவி வழங்கப்பட்டது

ஷா ஆலம், பிப் 23: கிள்ளான் மாவட்டம்  மற்றும் ஷா ஆலமில் மொத்தம் 10,000 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  குடும்பத் தலைவர்களுக்கு   நேற்று , பங்கிட் சிலாங்கூர் உதவி (BSB) RM1,000 வழங்கப்பட்டது.

மொத்தத்தில், 4,000 பேர் MBSA கெமுனிங் உத்தாமா மண்டபத்திலும், தலா 2,000 பேர் ஜலான் காப்பார் TNB கீலாட் மண்டபத்திலும், கோலக்கிள்ளான்  பண்டமாரன் விளையாட்டு வளாகம் மற்றும் மேரு  ஸ்ரீ கெராயோங் மண்டபத்திலும் கலந்துகொண்டனர்.

ஷெடா ரோசெலி, 44

MBSA கெமுனிங் மண்டபத்தில் சிலாங்கூர்கினி எடுத்த செய்திப்படி அடிப்படையில், சராசரி பெறுநர் உதவியைப் பெற மதியம் 2 மணிக்கே வரிசையில் நிற்கத் தொடங்கி விட்டனர்.

பெற்றவர்களில் ஒருவரான ஷெடா ரோசெலி, 44, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களை விடச் சிறிது தாமதமாக உதவி கிடைத்தாலும் விண்ணப்பம் இறுதியாக வெற்றியடைந்ததாகத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“தாமதமாகக் கிடைத்து இருந்தாலும், உதவியின் மதிப்பு ஏற்பட்ட இழப்புக்குச் சமமாக இல்லாவிட்டாலும் நான் நன்றியுடன் இருக்கிறேன்.

“குறைந்த பட்சம் பழுதடைந்த காரைச் சரிசெய்யவும், குழந்தைகளுக்குப் பள்ளி உபகரணங்களை வாங்கவும் எங்களால் முடிந்தது,” என்று ஆறு சிறு குழந்தைகளைக் கொண்ட அவர் கூறினார்.

எஸ் மரதமுத்து, 69

இதற்கிடையில், 69 வயதான எஸ் மரதமுத்து, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்காகவும், தொடர்ந்து நன்கொடைகளை வழங்கியதற்காகவும் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கறுப்பு வரலாறு என்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார், 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கெமுனிங் உத்தாமாவில் வாழ்ந்தாலும், ஒவ்வொரு முறை மழை பெய்யும்போது அவரும் அவரது மனைவியும் மிகவும் பயத்தில் உள்ளனர்.

“முதன்முறையாக வெள்ளம் மிகவும் கடுமையானது, கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களும் சேதமடைந்தன, கடந்த ஆண்டைப் போல இனி எந்த நிகழ்வுகளும் இருக்காது என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

டான், 61

மற்றொரு பிஎஸ்பி பெறுநர் 61 வயதுடைய டான் தன் நன்றியைத் தெரிவித்ததோடு இன்றைய விநியோகச் செயல்முறையை விரைவாகவும் எளிதாகவும் நடைபெற்றதனைப் பற்றி விவரித்தார்.

“நான் வயது மூத்தவர் என்பதால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வெள்ளத்தால் வீட்டில் ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்ய இந்தப் பணம் கொஞ்சம் உதவும்” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து பிஎஸ்பி திட்டம் தொடக்கத்திற்காக மாநில அரசு RM10 கோடி வழங்கியது.

உள்கட்டமைப்பு மறுவாழ்வு தவிர, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு RM10,000 உதவியும், வீடுகளை மறுசீரமைக்கக் குடும்பத் தலைவர்களுக்கு RM1,000 உதவியும் இந்த ஒதுக்கீட்டில் அடங்கும்.

உதவியைப் பெறத் தகுதியுடைய நபர்கள் மூன்று வகைகளில் அடங்குவர், அதாவது அரசாங்க பதிவேட்டிலுள்ள தற்காலிக மையங்களில் தங்கியவர், பொது அமைப்பு அல்லது தனியார் வெளியேற்ற மையங்களுக்குச் சென்றவர் மற்றும் வீட்டிலேயே இருந்தவர்கள்.


Pengarang :