ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பெரிய எண்ணிக்கையில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வங்கி கணக்குகளில் (EFT) வரவு வைக்க ஆலோசனை

ஷா ஆலம், பிப் 23: கிள்ளான் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வங்கிகளில் பெரிய எண்ணிக்கையில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வங்கி கணக்குகளில் (EFT) வரவு வைக்க ஆலோசனை கூறினார், மந்திரி புசார் .

ஒரு குடும்பத்திற்கு RM1,000 சிலாங்கூர் பாங்கிட் உதவியை (BSB) ரொக்கமாகப் பெற
நீண்ட வரிசைகளைத் தவிர்ப்பதற்காக வங்கிகளில் முன் ஏற்பாடாக நேரம் தேதியை நிர்ணயம் செய்து செல்வதால் அதிக நேரம் காத்திருப்பதைத் தவிர்கலாம் எனப் பெறுநர்களை டத்தோ மந்திரி புசார் கேட்டுக்கொள்கிறார்.

“கிள்ளான் மாவட்டம் மற்றும் நில அலுவலகம் (PDT) விண்ணப்பதாரர்களுக்குத் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் அல்லது EFT மூலம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது..
“இருப்பினும், பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் நேரடியாகப் பணத்தைப் பெறுவதைத் தேர்ந்தெடுத்தனர், இதனால் வழங்கப்பட்ட இடத்தில் நீண்ட வரிசை ஏற்பட்டது,” என்று கிள்ளான் மாவட்ட இலாக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர் அதைத் தானே நேரில் வந்து பெற்றுக்கொள்வதை தேர்வு செய்ததால் விநியோக இடத்தில் நெரிசல் ஏற்பட்டது என்று நேற்றைய சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க ஆலோசனை கூறினார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

“இந்தப் பெறுநரிடம் எஸ்எம்எஸ் மூலம் குறிப்பிட்ட சந்திப்பு நாள் மற்றும் நேரத்தில் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்..


Pengarang :