ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

ஹரிமாவ் மலாயா கால்பந்து குழுவின் உதவி பயிற்றுநராக இளவரசன் நியமனம்

கோலாலம்பூர், பிப் 24– சரவா யுனைடெட் கால்பந்து குழுவின் தலைமைப் பயிற்றுநரான இ.இளவரசனை தாம் தேசிய குழுவின் உதவி பயிற்றுநராக நியமித்துள்ளதாக ஹரிமாவ் மலாயா குழுவின் தலைமை பயிற்றுநர்  கிம் பான் கோன் அறிவித்துள்ளார்.

பயற்றுநருக்கு தேவையான அம்சங்களான விளையாட்டாளர்களை அறிந்திருப்பது மற்றும் உள்நாட்டு விளையாட்டு அரங்கில் பரந்த அனுபவத்தைக் கொண்டிருப்பது ஆகியவற்றைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் இளவரன் உதவி பயிற்றுநராக நியமிக்கப்படுவதாக தென் கொரியாவைச் சேர்ந்த அந்த தலைமை பயிற்றுநர் கூறினார்.

மலேசிய கால்பந்து குழுவின் (எப்.ஏ.எம்.) நுட்பப் பிரிவு இயக்குநர் பேட்டி ஸ்கோட் ஓ‘டோனெல் அவர்களால் போட்டி காணப்பட்டவர்களின்  விபரங்கள் ஆய்வு செய்தப் பின்னர் நான் இளவரசனை நேரில் பேட்டி கண்டேன். இப்பதவிக்கு இவரே சரியானவராகவும் எனக்கு உதவியாக இருக்கக்கூடிய பொருத்தமான நபராகவும் குழு பற்றிய தகவல்களை துல்லியமாக வழங்கக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் இருப்பார் என நம்புகிறேன் என மலேசியா கால்பந்து சங்கத்தின் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

ஹரிமாவ் மலாயா குழுவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் எனது முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கக்கூடியவராகவும் முழு ஈடுபாடு கொண்ட பயிற்றுநராகவும் இளவரசன் விளங்குவதை காண முடிகிறது என்றார் அவர்.

அறுபது வயதான இளவரசன் 2018 ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் தொழில்முறை பயிற்றுநர் உரிமத்தைக் கொண்டுள்ளார். இவர் கடத்த 2020 முதல் சரவா யுனைடெட் கால்பந்து குழுவை வழி நடத்தி வருகிறார்


Pengarang :