ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்திற்கு வரவேற்பு- 90,000 பேர் தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், பிப் 24- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 87,872 பேர்  ஊக்கத் தடுப்பூயைப் பெற்றுள்ளனர்.

ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்கு தினசரி அதிக எண்ணிக்கையிலானோர் செல்கேர் கிளினிக்குகளுக்கு வருவதானது இத்திட்டத்திற்கு கிடைத்து வரும் சிறப்பான வரவேற்புக்கு சான்றாக விளங்குவதாக செல்கேட் ஹெல்த்கேர் சென். பெர்ஹாட் தலைமை செயல்முறை அதிகாரி தெங்கு லெஸ்தா தெங்கு அலாடின் கூறினார்.

சட்ட மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தை தாங்கள் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய காலமாக கோவிட்-19 நோய்த் தொற்று அபரிமிதமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் அதனை விரைந்து பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசி தொடர்பான விபரங்களை  பொது மக்களுக்கு வழங்குவதற்காக 1800-226-600 என்ற தொலைபேசி எண்களில் 24 மணி நேர சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூரி கினியிடம் அவர் தெரிவித்தார்.

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநில மக்களுக்கு வழங்குவதற்காக 157,000 கோவிட்-19 தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி கூறியிருந்தார்.

செல்கேட் கிளினிக்குளின் பட்டியலை https://selcareclinic.com/our-clinics/  என்ற அகப்பக்கம் மற்றும் செலங்கா செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :