ALAM SEKITAR & CUACAANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

வட  சுமத்ராவில் பூகம்பம்- மலேசியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது

ஷா ஆலம், பிப் 25 - இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக மேற்கு தீபகற்பத்தில் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் உள்ளிட்ட பல மாநிலங்களில்  நில அதிர்வு உணரப்பட்டது.இச்சம்பவம் காலை 9.39 மணியளவில் நிகழ்ந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவின் பாய்கும்போ  வடமேற்கே 79 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையமிட்டிருந்தது.இதனிடையே, இந்த நில அதிர்வு தொடர்பில் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆறு புகார்களைப் பெற்றதாக அதன் நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.

தெலுக் டத்தோ நீதிமன்றம், பூச்சோங் தொழில் பேட்டை, தாமான் மேடான், காஜாங், ஜாலான் ஜம்ருட் 1 ஆகிய பகுதிகளிலிருந்து இப்புகார்கள் பெறப்படடதாக அவர் சொன்னார்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட இடங்களை தமது துறை அணுக்கமாக கண்காணித்து வருவதாகச் சொன்னார்.

Pengarang :