ECONOMYMEDIA STATEMENTPBT

இந்த ஞாயிற்றுக்கிழமை மலிவான கோழியை வாங்க RM5 கூப்பன் வழங்கப்பட்டது – பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், பிப் 26: பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதியில் வசிப்பவர்களுக்குக் கோழி மற்றும் முட்டை விலை தலையீடு திட்டத்தில் வழங்கப்படும் கோழியை வாங்க RM5 மதிப்புள்ள கூப்பன் வசதியை வழங்கியுள்ளார்.

அத்தொகுதி  சட்டமன்ற  உறுப்பினர்  ரோட்சியா இஸ்மாயில் கூறுகையில், இந்தக் கூப்பன்களை பெற முந்துபவர்களுக்கு வழங்கப்பட்டது, மேலும் இது குடியிருப்பாளர்கள் மலிவான விலையில் கோழியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது.

இந்த ஞாயிற்றுக்கிழமை கூப்பனைப் பெறுவதற்கு, https://forms.gle/hZ9uUUJdGmZggiCb36 என்ற இணையதளத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

“பத்து தீகாவில் வசிப்பவர்கள் இப்போது ஒரு கிலோவிற்கு RM8 என்ற விலையில் குறைந்த விலையில் கோழிக்கறியைப் பெறலாம்.

“பத்து தீகா தொகுதியில் முந்துபவர்களுக்கு RM5 கூப்பனை வழங்கப்படும்,” என்று அவர் பேஸ்புக்கில் கூறினார்.

பேஸ்புக்கில் காட்டப்படும் கிராஃபிக் தகவல் மூலம், அல்-ஹிடாயா மசூதிக்கு அடுத்துள்ள செக்சென் 18 வணிகத் தளத்தில் காலை 9 மணிக்குத் தொடங்கி நிகழ்ச்சி நடைபெறும்.

சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகத்தின் (PKPS) திட்டத்தின் மூலம் சிலாங்கூர் அரசாங்கம் ஒரு கிலோகிராம் RM8 என்ற உச்சவரம்பு விலையில் தரமான கோழியை விற்கிறது.

10 லட்சம் ரிங்கிட் நிதியில் 50,000 கோழிகள் விற்பனையாகின்றது, பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றால் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

 


Pengarang :