ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

உலு லங்காட்டில் 861 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன, சிலாங்கூர் இரண்டாவது இடத்தில் உள்ளது

ஷா ஆலம், பிப் 26: உலு லங்காட்டில் டிங்கி காச்சல்  பாதிப்பு இந்த ஆண்டு 25.5 விழுக்காடாக அதிகரித்து, ஆண்டின் முதல் ஏழு வாரங்களில் 861 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காஜாங் நகராட்சி கவுன்சில் (MPKj) தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 641 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக நஜ்முதீன் ஜெமைன் கூறினார்.

“மொத்தம், சிலாங்கூரில் 3,313 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

” பெட்டாலிங்கில் 1,093 சம்பவங்கள். உலு லங்காட் 861 சம்பவங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

“அந்த எண்ணிக்கையில், MPKj நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியில் 672 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் நேற்று MPKj மாதாந்திரக் கூட்டத்தில் கூறினார்.

அவர் தனது நிர்வாகப் பகுதியில் டிங்கி சம்பவங்கள் 43 இடங்களை உள்ளடக்கியது, மூன்று அதிக தாக்கம் கொண்ட  பகுதிகள்  கண்டறியப் பட்டுள்ளன, அதாவது காஜாங் தொகுதியில் இரண்டு மற்றும் செமினி தொகுதியில் ஒன்றுமாகும்

முன்னதாக, டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி நவம்பர் மாதம் மாநிலப் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது டிங்கியைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப் பட்டதாகத் தெரிவித்தார்.

இது புதிய தொழில்நுட்பங்களையும் பயன்பாடுகளையும் ஆராய உருவாக்க பட்டதோடு, நோய் பரவும் இடங்களைக் கண்டறிய ட்ரோன்கள் போன்ற புதிய தொழில் நுட்பங்களையும் ஆராய்வதும் இதில் அடங்கும் இதில் அடங்கும்.


Pengarang :