Kakitangan Jabatan Kerja Raya (JKR) meninjau kawasan insiden runtuhan tanah yang meragut empat nyawa di Taman Bukit Permai 2, Ampang pada 11 Mac 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

200 தாமான் புக்கிட் பெர்மாய் 2 குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய உத்தரவிடப் பட்டனர்

கோலாலம்பூர், மார்ச் 11 – அம்பாங்கின் தாமான் புக்கிட் பெர்மாய் 2ல் உள்ள 48 வீடுகளில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நில நகர்வுகள் காரணமாக விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வீடுகளைக் காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டது.

உலு லங்காட் மாவட்ட அதிகாரி டாக்டர் அனி அகமது கூறுகையில், விரிவான ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு இடம் கொடுப்பதற்காக உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“தற்போது நிலவும் நிச்சயமற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு, அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக, நான்கு லோரோங்கில் உள்ள 48 வீடுகளில் வசிப்பவர்கள் இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் அமைந்துள்ள அம்பாங் ஜெயா நகராட்சி கவுன்சில் (எம்பிஏஜே) சமூக மண்டபத்தில் நாங்கள் தற்காலிக தங்கும் மையத்தை (பிபிஎஸ்) அமைக்கிறோம்,” என்று அவர் இன்று சம்பவ இடத்தில் ஒரு ஊடகச் சந்திப்பில் கூறினார்.

இதுவரை, பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பிபிஎஸ்ஸில் தஞ்சம் அடையவில்லை, ஏனெனில் அவர்கள் அருகிலுள்ள உறவினர்கள், ஹோட்டல்கள் அல்லது ஹோம்ஸ்டேகளில் தங்கத் தேர்வு செய்கிறார்கள்.

இருப்பினும், தற்காலிகமாக அங்குத் தங்க விரும்பும் குடியிருப்பாளர்களுக்குப் பிபிஎஸ் திறக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கையாள்வதில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மூலோபாயத்தை வகுக்க, எம்பிஏஜே, பொதுப்பணித் துறை (JKR), காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மாவட்டப் பேரிடர் மேலாண்மை மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

“இதுவரை, சரிவின் உறுதித்தன்மை ஏற்படுத்தப்படாததால், துப்புரவு பணி மேற்கொள்ள முடியவில்லை,” என்றார்.

நேற்று மாலை 5.54 மணியளவில் அம்பாங் தாமான் புக்கிட் பெர்மாய் 2 இல் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 வீடுகள் மற்றும் 10 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டதோடு, நான்கு உயிர்கள் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.


Pengarang :