ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பல்கலைக்கழகத்துடனான நல்லுறவைக் கட்டிக்காப்பீர்- யு.பி.எம். மாணவர்களுக்கு சுல்தான் அறிவுறுத்து

ஷா ஆலம், மார்ச் 19-  மலேசிய புத்ரா பல்கலைக்கழக (யு.பி.எம்.) மாணவர்கள் பல்கலைக்கழகத்துடனான நல்லுறவை தொடர்ந்து கட்டிக் காத்து வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த உயர்கல்விக் கூடம் தொடர்ந்து சரியான தடத்தில் பயணிப்பதற்கும் அறிவாற்றலும் தொலைநோக்கும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கும் இந்த நல்லுறவு அவசியமாவதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

இத்தகைய நல்லுறவின் வாயிலாக பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்கு மாணவர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கும் அதேவேளையில் தங்களை பட்டதாரிகளாக உருவாக்கிய கல்வியாளர்களுக்கு நன்றிக் கடனைத் செலுத்துவதற்குரிய வாய்ப்பினையும் பெற இயலும் என்று அந்த உயர்கல்விக் கூடத்தின் வேந்தருமான அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் 45 வது பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது சுல்தான் இவ்வாறு கூறினார்.

இன்று தொடங்கி இம்மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 6,142 மாணவர்கள் பல்வேறு துறைகளில் பட்டம் பெறுகின்றனர்.

அவர்களில் 484 பேர் பி.எச்.டி. முனைவர் பட்டத்தையும் 1,611 பேர் முதுகலைப் பட்டத்தையும் 3,564 பேர் இளங்கலை பட்டத்தையும் 483 பேர் டிப்ளோமாவையும் பெறுகின்றனர்.


Pengarang :