ECONOMYHEALTHMEDIA STATEMENT

மாநிலத்தில் சுகாதார தொண்டுகளை முன்னெடுக்க 1,800 தன்னார்வலர்கள்

ஷா ஆலம், மார்ச் 21: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்ட சிலாங்கூர் சமூக நலத் தன்னார்வலர்கள்(சுகா) திட்டத்தில் மொத்தம் 1,800 நபர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவிட்-19 தொடர்பான 100க்கும் மேற்பட்ட பொது சுகாதார தொண்டுகளை இந்த காலகட்டத்தில் முன்னெடுக்க 1,800 தன்னார்வலர் சமூகத்திற்கு உதவியதாக பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட் கூறினார்.

“இந்த சுகாதார தொண்டர் அணியின் சாதனைகள் நிறுவப்பட்ட ஒரு வருடத்திற்குள் திருப்திகரமாக உள்ளன, அதனால் தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும்” என்று இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.

கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சிலாங்கூர் சமூக நலத் தன்னார்வலர்கள் செயல்திறன் குறித்து சிஜாங்காங் மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ‘டாக்டர் அகமது யூனுஸ் ஹைரியின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

பொது சுகாதாரத் துறையில் அதன் உறுப்பினர்கள் போதுமான படிப்பறிவைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு பொருத்தமான பயிற்சி மற்றும் படிப்புகள் தொடரப்படும் என்று டாக்டர் சித்தி மரியா கூறினார்.

சிலாங்கூர் வாசிகள்,18 வயதுக்கு மேல் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் கோவிட்-19 தொடர்பான சாதனங்கள்ப் பயன்படுத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் சிலாங்கூர் சமூக நலத் தன்னார்வலர் சேர்ந்துக் கொள்ளலாம்.

 


Pengarang :