ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு சிலாங்கூர் அரசு 770 கோடி வெள்ளி ஒதுக்கீடு

டாமன்சாரா, மார்ச் 25– சிலாங்கூரில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு 770 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தும் பணியை உள்ளடக்கிய இத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிள்ளான் ஆற்றை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பணி அமைந்துள்ளது. இந்த பணிக்கு உண்டாகும் செலவில் ஒரு பகுதியை சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) ஏற்றுக் கொள்ளும் என்று அவர் சொன்னார்.

இன்று இங்கு பிகே கித்தா ஸ்ரீ டாமன்சாரா மார்க்கெட்டை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத்தில் வெள்ளப் பிரச்னைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணும் வகையில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள இவ்வாண்டில் 6 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என்று மந்திரி புசார் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கூறியிருந்தார்.

இந்நோக்கத்திற்காக கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட அதே மதிப்பிலானத் தொகை இவ்வாண்டும் ஒதுக்கப்படுவதாக கூறிய அவர், எனினும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட தொகையில் 4 கோடி முதல் 4.5 கோடி வெள்ளி வரை மட்டுமே செலவிடப்பட்டது என்றார்.


Pengarang :