ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

RM50,000 வரை செலவாகும் இதயச் சிகிச்சை திட்டம் தொடரும்

ஷா ஆலம், மார்ச் 26: சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டும் இதயச் சிகிச்சைத் திட்டத்தைத் தொடர்கிறது, இது தேவைப்படும் மக்களுக்கு RM50,000 வரை நிதியுதவி அளிக்கிறது.

RM40.3 லட்சம் செலவில் 2018 இல் தொடங்கப்பட்டதில் இருந்து மொத்தம் 257 நோயாளிகள் பயனடைந்துள்ளதாகப் பொதுச் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட் தெரிவித்தார்.

“இந்தத் திட்டத்தைத் தொடர நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஏனெனில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்கள், அதிகரித்து வரும் இதயச் சிகிச்சைக்கான செலவுகளுக்கு நிதியளிப்பதில் உள்ள சிரமங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று சமீபத்தில் மீடியா சிலாங்கூர் சிறப்பு பேட்டியில் அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNS) கூட்டாக நிதியளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு RM1 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டம் சிலாங்கூரில் பிறந்த அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் வசிக்கும் மலேசியக் குடிமக்கள் மற்றும் மாதத்திற்கு RM8,000 க்கு மிகாமல் குடும்ப வருமானம் கொண்டவர்களுக்குத் திறந்திருக்கும்.

தேசிய இதய நிறுவனத்தில் சிகிச்சை பெறுவதற்கு முன் உத்தரவாதக் கடிதம் (ஜிஎல்) வழங்கும் செல்கேர் மேலாண்மை எஸ்டிஎன் பிஎச்டி (Selcare) மூலம் விண்ணப்பங்களைச் செய்யலாம்.

 


Pengarang :